tamilnadu

img

உ.பி.,யில் கோர விபத்து : புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி

லக்னோ:
ராஜஸ்தானில் இருந்து உத்தரப்பிர தேசம் சென்ற லாரி, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வெளிமாநி லங்களில் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் சொந்தஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை தங்கள் மாநிலத்திற்கு அழைத்து செல்ல மத்தியஅரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படு கிறது. ஆனாலும், அதற்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதாலோ போதுமானதாக இல்லாததாலோ பல தொழிலாளர்கள் நடந்தோ, லாரியில் ஏறியோ பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச்செல்ல, லாரியில் மொத்தமாக பயணித்தனர். அவர்களை ஏற்றி வந்த லாரி,உத்தரப்பிரதேச மாநிலம்  மிஹாலி பகுதியில் வந்தபோது, தில்லியிலிருந்து வந்த வேன் மீது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்க  மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என அவுரியா மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார். 22 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 15 பேர் சைஃபை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவுரியா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி அர்ச்சனா  ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

அவுரியா விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.காயமடைந்த அனைவருக்கும் தேவையான  மருத்துவ சிகிச்சை யளிக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ள ஆதித்யநாத், கான்பூர் நகர் காவல் ஆணையர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளார்.கொரோனா பரவலால் ஊரங்கு அமலாக்கப்பட்ட பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மார்ச் வேலையிழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெரிய நகரங்களில் இருந்து வீட்டிற்கு நடந்தே செல்கின்றனர். இந்த வாரத்தின் ஆரம்பநாட்களில்  15 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற மூன்று விபத்துகளில் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை வரை பல்வேறுமாநிலங்களில்  நடந்த சாலை விபத்துக்களில் 100- க்கும் மேற்பட்டோர் காய மடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள். மத்திய அரசு போதிய வசதிகளை செய்துதராததால் எப்படியாவது வீடு திரும்பிவிட வேண்டுமென்ற எண்ணத்தில் சைக்கிளிலோ, நடந்தோ, வாகனங்களிலோ சென்று இவர்கள் விபத்திற்குள்ளாகிவருகின்றனர்.

;